ஐஸ்கிரீமுக்கு தனிப்பிரிவு..
இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனம் ஐஸ்கிரீம்களுக்கு தனி வணிகப்பிரிவை மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனியான தயாரிப்பு மற்றும் விநியோக உரிமை தேவைப்படுவதால் அதற்கு தனி கவனம் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிறுவனம் ஐஸ்கிரீம்களை விற்று வருகிறது. இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 3 விழுக்காடாகும். ஏற்கனவே அந்நிறுவனம் மேக்னம் மற்றும் குவாலிட்டி வால்ஸ் உள்ளிட்ட தனித்தனி ஐஸ்கிரீம்களை விற்று வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் அமூல் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. மதர் டய்ரி,வடிலால், கிரீம் பெல்,நேச்சுரல்ஸ், ஹாவ்மோர் மற்றும் பாஸ்கின் ராபின்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் தனது ஐஶ்கிரீம் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முக்கியமான வணிகத்தில் ஐஸ்கிரீமும் ஒன்று என்பதால் அதனை தனி கவனம் செலுத்தி விற்பனை செய்ய HUL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் பென் அன் ஜெர்ரி மற்றும் மேக்னம் உள்ளிட்ட பெயர்களில் ஐஸ்கிரீம்களை விற்று வருகின்றன. 7.9 பில்லியன் அளவுக்கு ஐஸ்கிரீமில் வணிகம் நடக்கிறது. உலகளவில் பெரிய நிறுவனமாக இருந்த யுனிலவிர் கடந்த 1994-ல் குவாலிட்டி நிறுவனத்தையும், 2018-ல் ஆதித்யா மில்க் நிறுவனத்தையும் வாங்கியிருந்தது. இந்த கூட்ட நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஐஸ்கிரீம்களை ஏற்றுமதி செய்துவருகின்றன. சில ஊர்களில் உள்ளூர் பெயர்களில் விற்பனை நடக்கிறது.
பல பொருட்கள் விற்று வரும் இந்துஸ்தான் யுனிலிவர், குறிப்பிட்ட 30 பொருட்களுக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி அதன் விற்பனைகளை 70 விழுக்காடு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2025 நிதியாண்டில் இந்தியாவில் ஐஸ்கிரீம் வணிகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்றும், தற்போது இந்த வணிகம் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகவும் வசீர் அட்விசார்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.