10% விமானங்களை கேன்சல் செய்யும் விஸ்தாரா..
விஸ்தாரா நிறுவனம் தினசரி 25 முதல் 30 விமானங்களை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. போதிய பணியாட்கள் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தினசரி அந்நிறுவனம் 350 விமானங்களை இயக்கி வருகிறது. திடீரென விஸ்தாரா நிறுவனம் விமான சேவைகளை குறைப்பதால் டிக்கெட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ நகரங்களை இணைக்கும் விமானங்கள் அதிகம் குறைக்கப்பட இருக்கிறதாம். டெல்லி-மும்பை இடையே அந்நிறுவனம் தினசரி 18 விமானங்களை இயக்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இண்டிகோ 19 விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த பிப்ரவரியில் இயக்கப்பட்ட அதே அளவு விமானங்களை இயக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 22 விழுக்காடு கூடுதல் விமானங்களை இயக்க டிஜிசிஏ எனப்படும் விமானபோக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டுப்பிரிவுகளில்தான் அதிக விமான சேவை ரத்து செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது . போதிய விமானிகள் இல்லாதத்தல் கடந்த சில நாட்களாக 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தில் ஒரு மாதத்தில் 100மணி நேரம் பறக்கும் விதியை ஏராளமான விமானிகள் எட்டிவிட்டனர். விரைவில் நிறைய விமானிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனத்தின் சிஇஓ வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார்.