அடங்காமல் ஆட்டம் போடும் தங்கம் விலை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 53 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6660 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 53ஆயிரத்து280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு1 ரூபாய் உயர்ந்து 88 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, ஆயிரம் ரூபாய் உயர்ந்து 88 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 8 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டு புதிய உச்சங்களை எட்டின. . மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494 புள்ளிகள் உயர்ந்து 74,742 புள்ளிகளாக இருந்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி152 புள்ளிகள் உயர்ந்து 22,666புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் Mahindra & Mahindra, Eicher Motors, Maruti Suzuki, Reliance Industries ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Wipro, LTIMindtree, Adani Ports, Nestle India, Apollo Hospitalsஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், ஆற்றல்துறை , உள்கட்டமைப்பு, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1-2 விழுக்காடு ஏற்றம் பெற்றன. பொதுத்துறை வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை ஊடகத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு சரிவை சந்தித்தன. Abans Holdings, ABB India, Aster DM Health, Avenue Supermarts, Bosch, Cananra Bank, Cochin Shipyard, Eixher Motors, Epigral, Exide Industries, Glenmark, GAIL, HEG, Hind Zinc, Info Edge உள்ளிட்ட 200க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன.