ஏர்டெல் ரேட் ஏத்த போறாங்க எவ்வளவு தெரியுமா..
இந்தாண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு பிறகு ஜூலை-அக்டோபர் காலகட்டத்தில் சிம்கார்டு நிறுவனங்கள் விலைகளை 15-17% வரை ஏற்றப்போகிறார்கள். இதனை ஏர்டெல் தொடங்கி வைக்க இருக்கிறது. கடைசியாக 2021 டிசம்பரில் சிம்கார்டு நிறுவனங்கள் விலைகளை ஏற்றியிருந்தனர். இந்த புதிய விலையேற்றத்தால் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சொந்தக்காரரான சுனில் மிட்டல்தான் அதிகம் பயனடைய இருக்கிறார் என்று நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். சராசரியாக ஒரு நபரிடம் இருந்து ஏர்டெல் 2027 நிதியாண்டிற்குள் 286 ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு நபரிடம் இருந்து சராசரியாக 208 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 300 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. உலகத்திலேயே இந்தியாவில்தான் சிம்கார்டுகளுக்கு ஒரு மாதம் வசூலிக்கப்படும் பணம் மிகமிக குறைவாக இருக்கிறது. 2019-ல் ஜியோ விலையேற்றத்தை அறிவித்தது. அதன் பிறகு 2021 டிசம்பரில் மேலும் ஒரு முறை உயர்த்தப்பட்டது. இதேபோல் ஏர்டெல் நிறுவனம் அடுத்த நிதியாண்டான 2026 ஆம் ஆண்டிலேயே 260 ரூபாயை சராசரியாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ஏர்டெலும் ஜியோவும்தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றனர். வோடஃபோன்-பிஎஸ்என்எல் நிறுவனங்கள் நிதி சிக்கல்களால் தவித்து வருகின்றன. ஒரு பக்கம் 4ஜி சிம்கார்டுகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதே நேரம் 2ஜி பயனர்கள் இன்னும் 34 விழுக்காடு இருக்கின்றனர். வோடஃபோனும் ஏர்டெலும்2ஜியில் இருந்து 4ஜிக்கு வாடிக்கையாளர்களை மாற்ற பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. இது பெரிய அளவில் பலனளிக்கவில்லை.