ஸ்விஃப்ட் கார்கள் விலை உயர்வு..
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது ஸ்விஃப்ட் மற்றும் கிராண் விட்டாரா சிக்மா ஆகிய கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. ஸ்விஃப்ட் ரக கார்கள் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு வழக்கத்தை விட 25 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. , கிராண்ட் விடாரா சிக்மா ரக கார்கள் 19 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துவிட்டது.
விலைவாசி உயர்வு மற்றும் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பை காரணம் காட்டி ஏற்கனவே மாருதி சுசுக்கி விலையை உயர்த்தி இருந்தது. வர்த்தக நேர முடிவில் ஒரு பங்கின் விலை 1.49 விழுக்காடு சரிந்து 12,699 ரூபாயாக விற்கப்பட்டது. மார்ச் மாதத்தில் மட்டும் 1,87,196 கார்களை உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் விற்றுள்ளதாக மாருதி சுசுக்கி அறிவித்திருந்தது. உள்நாட்டு விற்பனையாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 330 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு மார்ச்சைவிட 14 விழுக்காடு அதிகமாகும். 2023-34 நிதியாண்டில் மாருதி சுசுக்கி தனது அதிகபட்ச விற்பனையாக 21 லட்சத்து 35 ஆயிரத்து 323 கார்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.