FPO வெளியிட வோடஃபோன் ஐடியா திட்டம்..
வோடஃபோன் ஐடியா நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் 18 முதல் 20 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் பாதியில் இது நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. Jefferies, SBI Caps, Axis Capital உள்ளிட்ட நிறுவனங்களை பங்குவெளியீட்டின் மேலாளர் நிறுவனங்களாக வோடஃபோன் ஐடியா நியமிக்க இருக்கின்றன.
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய FPOஆக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை எஸ் பேங்க் நிறுவனம் 15ஆயிரம் கோடி ரூபாயை பங்குச்சந்தையில் விற்றதே மிகப்பெரிய விற்பனையாக இருந்தது. இதனை இனி உடைக்கப்போவதாக கூறப்படுகிறது. 20 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக திரட்ட இருந்த கவுதம் அதானி திட்டமிட்டு, கடைசி நேரத்தில் அது ஹிண்டன்பர்க் அறிக்கையின் காரணமாக அறிவிப்பு கடைசி நேரத்தில் தில்லுமுள்ளு ஏற்பட்டு கவுதம் அதானி அந்த திட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் FPO பங்குகள் வெளியிட வோடஃபோன் ஐடியா திட்டமிட்டுள்ளது. கடனில் சிக்கித்தவிக்கும் வோடஃபோன் நிறுவனத்தில் 33 விழுக்காடு பணம் மத்திய அரசு பங்காக கொண்ருக்கிறது. வெள்ளிக்கிழமை இருப்பதை விட வோடபோன் பங்குகளின் விலை 13.36 ரூபாயில் இருந்து உயர்ந்து 14.87 ரூபாயாக பங்குச்சந்தைகளில் விற்பனையாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 22 கோடியே 5 லட்சம் பேர் மட்டுமே வோடஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக தொடர இருக்கின்றனர். வாடிக்கையாளர்ககளை தக்க வைக்கவும் பழைய வாடிக்கையாளர்களை தங்கள் சிம்கார்டு நெட்வொர்க்கும்க்குள் ஈர்க்கவும் இந்த முயற்சியை வோடஃபோன் ஐடியா நிறுவனம் எடுத்துள்ளது. முன்தின வணிக விலையை விட 2 விழுக்காடு வரை விலை குறைந்தன