தேர்தல் நன்கொடை பத்திரம் ஆர்டிஐயில் வராதா?
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்ட நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டாலும், அது குறித்த தகவல்களை வெளியிட இயலாது என்று பதில் கிடைத்திருக்கிறது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கியின் அவகாசம் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் லோகேஷ் பத்ரா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வழங்க கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த வங்கி பிரிவு 8இன் கீன் 1 இ, மற்றும் ஜே ஆகிய பிரிவுகளின்படி தனிப்பட்ட விவரங்களை வங்கி தர இயலாது என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணைய பத்திர வழக்கில் ஹரிஷ் சால்வேவுக்கு சம்பளமாக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதையும் பத்ரா கேள்வியாக முன்வைத்தார். இதற்கும் பாரத ஸ்டேட் வங்கி பதில் அளிக்கவில்லை. கடந்த மார்ச் 15 ஆ்ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை கொடுத்தே ஆகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடுபிடி அளித்ததை அடுத்து அனைத்து பத்திரங்கள் மற்றும் வாங்கியவர்களின் பெயர்களை பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் அளித்தது.
இறுதியாக 22,217 தேர்தல் பத்திரங்கள் கடந்த 2019 முதல் பிப்ரவரி 15 2024 வரை வாங்கப்பட்டதாகவும், அதில் 22,030 பத்திரங்களை பணமாக அரசியல் கட்சியினர் மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.