“மோசமான பிரச்சனையே இனிதான் இருக்கு..”
டெல்லியை அடிப்படையாக கொண்டு இயங்கும் விஸ்தாரா நிறுவனம் அண்மையில் தனது விமான சேவைகளை குறைத்தது. இதனால் அந்நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இனி வரும் நாட்கள் மோசமாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோக் கண்ணன் எச்சரித்துள்ளார். டாடா குழுமத்துடன் விஸ்தாரா நிறுவனம் இணைந்ததால் பெரும்பாலான விமானிகள் விடுப்பில் சென்றுவிட்டனர். பறவைகள் மோதல், நிர்வாக பணிகள் காரணமாக ஏற்கனவே சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானிகளுக்கு ஓய்வளிக்கும் வகையில் அண்மையில் திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சூழலில் 2022-ல் புதியதாக விமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீர் விடுமுறையையும் எடுத்துள்ளனர். இதனால் விமானிகளுக்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்து வருகிறது. விமானிகளின் இந்த போராட்டம் மிகப்பெரியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 9 ஆம் தேதி வரை சரியான நேரத்தில் விமானங்கள் வரும் விகிதம் 89 விழுக்காடாக இருந்த நிலையில் 10ஆம் தேதி இது 77.3 விழுக்காடாக சரிந்தது. சரியான நேரத்தில் விமானங்களை இயக்குவதில் ஆகாஸா ஏர் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. அந்நிறுவனம் 91.8% சரியான நேரத்தில் விமானங்களை இயக்குகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இண்டிகோ நிறுவனம் 81.9விழுக்காடு உள்ளது. இதற்கும் அடுத்த இடத்தில் ஸ்பைஸ்ஜெட் இருக்கிறது. (77.6%)
சரியான நேரத்தில் விமானங்களை இயக்குவது அவ்வப்போது பல்வேறு காரணிகளால் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.