இந்தியாவுக்கு வருகிறதா ஸ்டார்லிங்?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவரின் ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவில் தனது இணைய சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்தை உலகளவில் 92 கோடி இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் ஆகியவை இந்தியாவில் இணைய சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களாக திகழ்கின்றன. இதற்கு அடுத்த இடங்களில் வோடஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் உள்ளன. ஸ்டார்லிங் நிறுவனம் விரைவில் உரிமம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் தொலைதொடர்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதால் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் இணைய சேவை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் நிறுவனத்தின் ஒன்வெப், அமேசானின் குய்பர் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சேவையை தொடங்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்கின் வருகை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாராத்தை மேலும் வலுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஸ்டார்லிங் நிறுவனம் 220 மெகாபைட்ஸ் ஒரு நொடிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் 100 மெகாபைட்ஸ் பர் செகண்ட் என்ற அளவில் இணைய சேவையை பெறுகின்றனர். இந்தியாவில் இதற்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்று எந்த தகவல்களும் வெளியாகவில்லை,
அமெரிக்காவில் ஸ்டார்லிங் நிறுவன வைஃபைக்கு கிராமபுறங்களில் ஒரு மாதத்துக்கு 120 டாலர் வசூலிக்கப்படுகிறது.