தணியாத டீசல் மோகம்..
இந்தியாவில் படிம எரிபொருளான கச்சா எண்ணெய் தேவை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தாண்டில் மட்டும் 228 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுவதாக ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பிரதானமாக டீசலின் தேவையே அதிகரித்துள்ளது. விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் டீசலின் தேவை அதிகரித்திருப்பதாக ஓபெக் அமைப்பு தெரிவித்துள்ளது. திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையும், விமான போக்குவரத்தும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்தாண்டின் முதல் பாதியில் 250 ஆயிரம் பேரல்கள் ஒரு ஆண்டுக்கு ஆண்டு தேவை இருப்பதாகவும்,இதனால் பொருளாதாரம் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முக்கியமாக டீசலின் தேவை அதிகரிக்கும் என்று கணித்துள்ள அந்த அமைப்பு, அதற்கு அடுத்தபடியாக தார் எனப்படும் பிட்டுமனை அதிகம் வாங்குவதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து சார்ந்த எரிபொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளர்ச்சியும் இந்தியாவில் அதிகம் இருக்கும் என்றும் ஓபெக் தெரிவித்துள்ளது. உலகளவில் ஆண்டுக்கு ஆண்டு எண்ணெய் தேவை 2.2 மில்லியன் பேரலாக இருக்கிறது. முதல் காலாண்டில் 2.0 மில்லியனாக இருக்கும் எண்ணெய் தேவை அடுத்தடுத்த காலாண்டுகளில் முறையே 2.2, 2.7 மற்றும் 2.1மில்லியனாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முறையாக கண்காணிக்கப்படுவதாகவும், உலகளவில் நிலவும் நிலையற்ற சூழல் மற்றும் சந்தை சமநிலையை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஓபெக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.