இன்னும் கண்டிப்பா உயருமாம் தங்கம் விலை..
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை 29 விழுக்காடு வரை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி பாதியில் இருந்து இதுவரை மட்டும் 18 விழுக்காடு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. பங்குச்சந்தையில் நிலவும் மோசமான சூழலும், உலகளாவிய பிரச்சனைகள் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். கச்சா எண்ணெய், ஈக்விட்டி, டாலர் மற்றும் கடன் பத்திரங்கள் விலைகளும் இந்த விவகாரத்தால் கடுமையாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையிலும் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. தங்கம் விலை உயர முக்கிய காரணிகளை பார்க்கலாம்.. 1) தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் அதற்கு தேவை அதிகரித்துள்ளது..
2)உலக நாடுகள் அனைத்திலும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றன. அவசர காலங்களில் தங்கம் நல்ல முதலீடாக இருப்பதால் அதனை மத்திய வங்கிகள் எளிதாக மாற்றி வருகின்றன. 2022-ல் மத்திய வங்கிகள் ஐயிரத்து 82 டன் தங்கத்தை வாங்கிய நிலையில் கடந்தாண்டு ஆயிரத்து 37 டன் வாங்கப்பட்டுள்ளது. உலக தங்க கழகத்தின் கணக்கின்படி இதுவரை 39 டன் தங்கம் மத்திய வங்கிகளால் வாங்கப்பட்டுள்ளது. 3)பங்குச்சந்தைகள் உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மதிப்பு உயர்வு ஆகியவை தங்கத்தின் மீதான மதிப்பை உயர்த்தி வருகின்றன என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.