பெருசா வருமானம் இல்ல..
பார்தி ஏர்டெல்,ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை வசூலான தொகை குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் அரையாண்டின் இரண்டாவது பிற்பகுதியில் சிம்கார்ட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகம் தொகை வசூலிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 20 விழுக்காடு அளவுக்கு அந்நிறுவனங்கள் பணத்தை வசூலிக்க இருக்கின்றனர். ஜூன் மாதத்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துவிடும், அதே நேரம் பல நிறுவனங்களும் தங்கள் விலேயேற்றத்தை அறிவிக்க இருக்கின்றன. குறிப்பாக அலைகற்றை ஏலமும் அதே மாதத்தில் வர இருக்கிறது. இதற்கு நடுவில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வோடஃபோன் ஐடியா நிறுவனம் திரட்ட திட்டமிட்டுள்ளது. 0-3 விழுக்காடு அளவுக்கு மட்டுமே வருமானம் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 11.5 மில்லியன் கூடுதல் வாடிக்கையாளர்கள் கடந்த டிசம்பர் வரை இணைந்திருக்கின்றனர். ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் உயர்வு 3.8விழுக்காடாக உயர்ந்துள்ளது. புதிதாக 3.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக ஏர்டெலுக்கு வந்துள்ளனர். வோடஃபோன் ஐடியா நிறுவனம் 20 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த காலகட்டத்தில் இழந்திருக்கிறது. தேர்தலுக்கு பிறகு 15-17 விழுக்காடு வரை மூன்று நிறுவனங்களும் சந்தாவை உயர்த்த இருக்கின்றன. டெலிகாம் நிறுவனங்கள் உள்கட்டமைப்புக்கு ஏற்கனவே பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் நிலையில் 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.