இஸ்ரேல் ஈரான் மோதல் இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை விசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய பரபரப்பு நிலவிவருகிறது. சிரியாவில் உள்ள ஈரானிய துணை தூதரகம் தாக்கப்பட்டதே இந்த பிரச்சனைக்கு காரணமாகும். சைப்ரஸ் லெபனான், ஈராக்,ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் கூட்டாளிகளாக உள்ளனர். இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு ரயில் மற்றும் கடல் வழியாக வணிகம் மேற்கொள்ள இந்தியா அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. பெட்ரோ கெமிக்கல், விவசாயம், தண்ணீர் மற்றும் ஐடி சார்ந்த துறைகள் இந்தியாவில் இருந்தும் அந்த நாடுகளிடம் இருந்தும் இந்தியா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகின்றது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சி, பால் பொருட்கள், பாஸ்மதி அரிசி உள்ளிட்டவை ஏற்றுமதி இந்த சண்டையால் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி மட்டும் ஈரானுக்கு 598 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒரே ஆண்டில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல் டீத்தூளும் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் இஸ்ரேலுக்கு இந்தியா 3 ஆவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு, அதேபோல் உலகளவில் இந்தியா 7 ஆவது பெரிய நாடாகும். இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஈரான்-இஸ்ரேல் சண்டையால் டீ, அரிசி ஏற்றுமதியும் சமையல் எண்ணெய் குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கடல் பகுதியில் சண்டை காரணமாக வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு கடலுக்கு பதில் வியாபாரிகள் விமானம் மூலம் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இதனால் செலவு அதிகமாகிறது. கப்பலின் மூலம் அனுப்பினாலும் கப்பலுக்கான காப்பீட்டு தொகையும் 15-20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.