கோடையில் இந்த பொருட்கள் விற்பனைதான் அதிகம்..
இந்தியா முழுவதும் மக்களை வெயில் கொடுமை படுத்தத் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் இந்த கோடையில் வழக்கத்தை விட அதிகளவு பீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகத் தொடங்கியுள்ளது. உலகிலேயே அதிகம் மக்கள் வசிக்கும் நாடான இந்தியாவில் 10 முதல் 20 நாட்கள் வெப்பல அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை இந்த வெப்பக்காற்று 40 டிகிரி வரை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புளூஸ்டார் ஏசி நிறுவனம் ஏராளமான புதுப்புது ஏசி ரகங்களை களமிறக்கியுள்ளது. 25 விழுக்காடு வரை வணிகம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு வெறும் 5 விழுக்காடு லாபத்தை மட்டுமே புளூஸ்டார் நிறுவனம் பார்த்தது. இதேபோல் அமெரிக்க ஐஸ்கிரீம் நிறுவனமான பாஸ்கின் ராபின்ஸ் இந்தியாவில் 20 வகையான ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கோடை காலத்தில் மிகப்பெரிய அளவில் லாபத்தை பதிவு செய்ய காத்திருக்கின்றன. இந்தியாவில் 10 விழுக்காடு மக்கள் ஏசி பயன்படுத்துவார்கள் என்று நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. இந்தியாவில் 10-ல் 9 பேர் ஏசி வாங்குவது முதல்முறையாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் அலுவலகங்களில் ஏசியில் இருந்து பழகிவிட்டு மீண்டும் வீடுகளிலும் ஏசியை தேடுகின்றனர். வழக்கமாக 2 மாதங்களுக்கு முன்பே ஏசி வாங்க பலரும் திட்டமிட்டு வாங்க முற்படுவதாகவும், ஆனால் இந்தமுறை அனிலின் தாக்கத்தால் மக்கள் விரைவாக ஏசி வாங்குவதாகவும் ஏசி தயாரிப்போர் தெரிவிக்கின்றனர். புளூஸ்டார் மற்றும் பாஸ்கின் ராபின்ஸ் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்ய நிதி ஒதுக்கியுள்ளனர். இளநீர், தர்பூசணி, கிர்ணி பழங்களை செப்டோ, ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களும் டெலிவரி செய்யத் தொடங்கிவிட்டனர். கோடை தொடங்கியது முதல் ஐஸ்கிரீம் ஆர்டர்களின் விகிதம் 43 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. ஸ்விக்கியில் ஜூஸ் ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்ந்திருக்கிறதாம். இதேபோல் கூலிங்கான பீரின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.
காய்கனிகள்,விலைகளும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.