அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி அதிகரிப்பு..
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் அளவு கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி செய்த அளவு 15 வி ழுக்காடு உயர்ந்து 7.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்று மருந்து ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு குழுவான பாரம்எக்சில் நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த ஏற்றுமதி அளவு 6.80 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. மருந்துகளுக்கு விரைவான ஒப்புதல் கிடைத்திருப்பதே இந்த ஏற்றுமதி உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டு வரை இந்திய மருந்துகளுக்கான ஒப்புதல் அமெரிக்காவில் வேகமாக இருந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஒப்புதல் தாமதமானது. ஆனால் 2023ஆம் ஆண்டு மீண்டும் பழையபடி இந்திய மருந்துகளுக்கு வேகமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதால் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது. 2023-ல் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த மருந்துகளுக்கு 40 விழுக்காடு அளவுக்கு எளிதாக ஒப்புதல் கிடைத்தன. அதிலும் சில மருந்துகள் முதல் முறை மருந்துகள். அமெரிக்க அரசு கொண்டுவந்த ஐஆர்ஏ சட்டம்மூலமாக பிரிஸ்கிரிப்சன் மருந்துகள் விலை கணிசமாக குறைந்தது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால் அந்த ஆர்டர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.இதயநோய்,புற்றுநோய்,வலி நிவாரணிகள் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டன. மற்றொரு முக்கிய காரணியாக FDAஎனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை விரைவாக மருந்துகளை கிளியரன்ஸ் செய்வதும் இந்திய மருந்துகள் விரைவாக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது. நடப்பு நிதியாண்டிலும் இதே வேகம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்றும் பாரம்எக்சில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.