இந்தியா வளர்கிறது.. ஐஎம்எஃப் கூறுவது என்ன?
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 25 நிதியாண்டில் ஏற்கனவே கணித்ததை விட 0.30விழுக்காடு அதிகரித்து 6.8விழுக்காடாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வெறும் 4.6விழுக்காடாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் 2026 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5விழுக்காடு உயரும் என்றும் கூறப்படுகிறுது. இந்தியாவின் பணவீக்க விகிதம் 4.6விழுக்காடாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 4.2%ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்திருக்கிறது. இந்தியாவில் வேலை செய்ய ஆர்வமான இளைஞர்கள் மக்கள்தொகை அதிகம் இருப்பதே இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 2024-ல் சீனாவின் வளர்ச்சி 4.6 விழுக்காடாக குறையும் என்றும் அதற்கு அடுத்த ஆண்டு 4.1 விழுக்காடாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பணவீக்கம், சீனாவில் தேவை குறைந்தது, ஐரோப்பா மற்றும் இரண்டு போர்கள் காரணமாக உலகளவில் பெரிய மந்தநிலை தொடர்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2024,25 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உலக ஜிடிபி 3.2விழுக்காடு அளவு மட்டும் உயர்ந்திருப்பதாகவும் ஐஎம்எப் கூறுகிறுத. பல நாடுகளில் பணவீக்கம் பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறியுள்ள அந்நிறுவன பொருளாதார நிபுணர்கள், வட்டி விகிதங்களை பல நாடுகளும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 2.7 விழுக்காடாகவும் ஐஎம்எஃப் கணித்துள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருக்கும் என்று கூறியுள்ள ஐஎம்எஃப், சீனாவை ஒப்பிடும்போது பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் வேகமாக வளர்வதாக கூறியுள்ளது.
உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஜி20 நாடுகளின் பங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவதாகவும் சாடியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் வளர்ச்சி 4.9 விழுக்காட்டில் இருந்து 4.7 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் ஐஎம்எஃப் தனது புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது.