பாதி பேருக்கு ஏஐ தெரியும் தெரியுமா?
உலகத்திலேயே ஒரு நிறுவனத்தில் அதிகம் பேர் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கற்றுள்ளனர் என்றால் அது டிசிஎஸில்தான் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 31 ஆம் தேதி வரை 2024 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள செயற்கை நுண்ணறிவு பயிற்சி அதன் பணியாளர்களுக்கு அளித்திருப்பதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. டிசிஎஸில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் தெரியும் என்றும் கீர்த்திவாசன் குறிப்பிட்டுள்ளார். ஜெனரேட்டிவ் ஏஐ நுட்பங்களில் 200 நுட்பங்கள் டிசிஎஸின் கிளையண்டுகளுக்கு அளிக்கப்படுகின்றன. டிசிஎஸ் நிறுவன பணியாளர்கள் மிக விரைவாக வருங்காலத்துக்கு தேவையானவற்றை கற்று வைத்துள்ளனர் என்றும் கீர்த்தி வாசன் குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசிஎஸில் ஹைப்ரிட் வகை பணி முறை ஒழிக்கப்பட்டது. வாரத்தில் 5 நாட்கள் பணியாளர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது. இதனிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் அந்நிறுவனத்தில் இருந்து வரும் மே மாதம் ஓய்வு பெற இருக்கிறார். பல முக்கியமான பதவிகளில் சுப்பிரமணியம் கடந்த 40 ஆண்டுகளாக இருந்துள்ளார். ஓய்வுபெறும் சுப்பிரமணியத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கீர்த்திவாசன் குறிப்பிட்டுள்ளார்.