ரொம்ப கொண்டாட வேண்டாம்..
2029-ல் உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடு என்று அதிகம் கொண்டாட வேண்டாம் என்றும்,அதுவரை இந்தியா ஏழை நாடுதான் என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஜி. சுப்பாராவ் கூறியுள்ளார். பணம் வைத்திருப்பதால் மட்டும் ஒரு நாட்டை வளர்ந்த நாடு என்று கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சவுதி அரேபியாவை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
உலகின் 3 ஆவது பெரிய பணக்கார நாடாக இந்தியா மாறும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர்,நம் நாட்டில் 140 கோடி திறமையானவர்கள் இருக்கின்றனர் என்றார். எனுனும் இந்தியாவில் ஏழை நாடுதான் என்றும் ரிசர்வ் வங்கி முழக்கமிட்டார். தற்போது உலக பொருளாதார நிலையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது. தனிநபர் வருவாயின் சராசரியாக 2600 டாலர்களாக இருப்பதாக கூறினார். பிரிக்ஸ் மற்றும் ஜி20 அமைப்பில் மிக வறுமையான நாடு இந்தியாதான் என்றும் தகவல் அளித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி,மாநில சுயாட்சி மரியாதை,,வெளிப்படைத் தன்மையோடு ஆக்யவற்றல் கவனம் தேவை என்றும் குறிப்பிட்டார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்துவி்ட பிரதமர் மோடி ஒரு தொலைநோக்கு திட்டம் வைத்திருக்கிறார் என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியிருந்தார்.