பெகட்ரான் டீலை சீக்கிரம் முடிக்கும் டாடா.,
ஐபோன் உற்பத்தியில் இந்தியாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள பெகட்ரான் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க டாடா நிறுவனம் காய் நகர்த்தி வருகிறது. இது பற்றி புளூம்பர்க் செய்தி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ., அதன்படி இந்த டீல் வரும் மே மாதத்திற்குள் முடியும் என்று கூறப்படுகிறது.ஆப்பிள் நிறுவனத்துடனான டாடா நிறுவனத்தின் பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய டீல் முடிய இருக்கிறது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், சென்னைக்கு மிக மிக அருகில் இந்த புதிய நிறுவனத்தின் ஆலை அமைய இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. ஐபோன் உற்பத்தியில் சீனாவை மட்டும் நம்பாமல் இந்தியாவில் கணிசமான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் கருதி வருகிறது. நரேந்திர மோடியின் ஆசையும் இதுவாகவே இருக்கிறது.ஏற்கனவே தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் தைவானை பூர்விகமாக கொண்ட விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் வெற்றிகரமாக வாங்கியிருந்தது. ஆப்பிள் நிறுவனத்துடன் டாடா நிறுவனத்தின் பந்தமும் இதன் மூலம் வலுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.