தங்கம் விலையேற சீனாவும் காரணம்..,
தங்கம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே வரி போடப்படும் சூழல் ஏற்படும் என்ற நிலையில் தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர்கள் என்ற உச்ச விலையில் விற்பனை செய்யப்படுவதும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. . மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் போர், அமெரிக்கா வட்டி விகிதங்களை குறைப்பதல் தயக்கம் உள்ளிட்ட காரணிகளும் தங்கம் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு வைத்திருக்க பிரதான காரணிகளாக இத்தனை நாள் கருதப்பட்டது. இதற்கு நிஜமான காரணம் சர்வதேச அளவில் தங்கத்தை சீனா தொடர்ந்து வாங்கி வருவதும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. அந்நாட்டு மத்திய வங்கியும் அதிகளவில் தங்கத்தை வாங்கிக்குவித்து வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு வெறும் 6 விழுக்காடு மட்டுமே , அதே நேரம் சீனாவில் இந்த தேவை 10 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கட்டித் தங்கம் மற்றும் தங்க நாணயங்கள் மீது சீனர்கள் முதலீடு செய்யும் போக்கு 28 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. உலகிலேயே அதிக தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடாக சீனா திகழ்ந்து வரும் போதிலும் 2,800 டன் அளவுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சீனா தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது. இது மட்டுமின்றி கடந்த 17 மாதங்களாக சீன மத்திய வங்கி தங்கத்தை தொடர்ந்து அதிகமாக வாங்கி வருகிறது. சீன பங்குச்சந்தைகளிலும் தங்கப்பத்திரங்களின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.