உயர்ந்து முடிந்த சந்தைகள், சரிந்து விழுந்த தங்கம் விலை..
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 22 ஆம் தேதி மிகப்பெரிய ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 560 புள்ளிகள் உயர்ந்து 73648 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி189 புள்ளிகள் உயர்ந்து 22,336 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில்BPCL, Tata Consumer Products, Eicher Motors, L&T, Shriram Finance,ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்NTPC, HDFC Bank, JSW Steel, IndusInd Bank,Tata Steelஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் ,எரிவாயுத்துறை மற்றும் சுகாதாரத்துறை பங்குகளும் உயர்வில் முடிந்தன. Eicher Motors, Bharti Airtel, M&M, Bharti Airtel, Century Textile, Hikal, Hindustan Copper, Jindal Steel, JSW Energy, Just Dial, Linde India, Lloyds Metals, Motilal Oswal, Siemens, Universal Cable, Va Tech Wabag, Voltas, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. ஆட்டம் போட்ட தங்கம் சற்று சரிந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் விலை குறைந்து 54 ஆயிரத்து 760 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6845 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 89 ரூபாயாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 89 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.