கடன் வாங்கி சம்பளம் தரும் பிரபலம்…
பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பைஜூஸ் தனது பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாமல் தடுமாறிய போது பைஜுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன்தனது சொந்த கடனில் இருந்து எடுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்நிறுவனம் மிகப்பெரிய நிதி சிக்கலில் உள்ள நிலையில் 30 கோடி ரூபாய் கடனை ரவீந்திரன் வாங்கியுள்ளார். நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்போருக்கு பகுதி அளவு சம்பளமும், ஆசிரியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு முழு சம்பளமும் அளிக்கப்படுகிறதாம். கடந்த பெப்ரவரியில் சில ஊழியர்களுக்கு பகுதி அளவு சம்பளம்தான் வழங்கப்பட்டது. ஆனால் மார்ச் மாதத்தின் சம்பளம் பெரிய அளவில் குறைக்கப்படாமல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தில் மொத்தம் 15 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளமாக மட்டும் 40 முதல் 50 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போதிய பணம் இல்லாமல் அந்நிறுவனம் தவித்து வருகிறது. வழக்கமான சம்பளமாக இல்லாமல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி தான் இரண்டு மாத நிலுவை சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்நிறுவனம் தங்களுக்கு வந்து சேர வேண்டிய நிதியைவிடுவிக்கும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திலும் முறையிட்டுள்ளது. 5 கோடி ரூபாய் கூட திரட்ட முடியாமல் இருந்த பைஜூஸ் நிறுவனம் தற்போது இந்த சூழலிலிலும் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை தாமதமாகவாவது வழங்கியுள்ளது. ஏற்கனவே ரவீந்திரனை தலைமை பதவியில் இருந்து நீக்க இயக்குநர்கள் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.