டெஸ்லா பங்குகளுக்கு மவுசு..,
மின்சார கார்கள் உற்பத்தியில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் மதிப்பு உலகளவில் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெஸ்லா நிறுவன பங்குகள் 43 விழுக்காடு வரை விலை சரிந்துள்ளன. ஆட்குறைப்பு, விலைகுறைப்பு என அடுத்தடுத்த சிக்கல்களை மஸ்க் சந்தித்து வருகிறார். அந்நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலில் 0.7 விழுக்காடு உயர்ந்து 143 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது. முதலீட்டாளர்களை சந்தித்த பிறகு மாடல் 2 என்ற புதிய மலிவு விலை கார்களை 2025-ல் அறிமுகப்படுத்துவது குறித்து மஸ்க் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலை கார்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மஸ்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் மஸ்க் அறிவிப்பார் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருப்பதால் தற்போது சந்தையில் டெஸ்லா பங்குகள் உயர்ந்தே உள்ளன. அந்நிறுவன வருவாயைப்பொருத்தவரை 22 விழுக்காடு குறைந்துள்ளது. அந்நிறுவனத்தின் பணப்புழக்கம் 70 விழுக்காடு குறைந்து 654 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் அறிவித்த விலைகுறைப்பு போதுமானதாக இல்லை என்றும் ஒரு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். தானியங்கி கார்களுக்கான பணிகளையும் மஸ்க் தொடர்ந்து செய்து வருகிறார்.