நம்பிக்கை துளிர்வித்த வோடஃபோன் ஐடியா…,
பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம் அண்மையில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு FPO வெளியிட்டது. இதனை பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கினர். வோடபோன்க்கு தேவையான முழு தொகையும் கிடைத்ததை அடுத்து ஜியோ மற்றும் ஏர்டெலுடன் போட்டியிட வோடபோன் திட்டமிட்டுள்ளது. நான்காம் தலைமுறை அலைக்கற்றை மற்றும் ஐந்தாம் கட்ட அலைக்கற்றையையும் தயார்படுத்தி வருகிறது வோடபோன். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் வோடபோன் நிறுவனத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாதான் போட்டியாளர்கள் என்பது உறுதியாகியுள்ளது. கடுமையான நிதி சிக்கலில் இருந்து வந்த வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதாவது ஆறு புள்ளி 36 மடங்கு அதிகம் பேர் வாங்கிக்குவித்துள்ளனர். ஆயிரத்து இருநூற்று அறுபது கோடி பங்குகளை அந்நிறுவனம் அண்மையில் விற்றது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளியீடாகும். கடன் மற்றும் ஈக்விட்டி மூலம் இந்த தொகை வசூலிக்கப்பட்டது. இந்தியாவில் வோடபோன் ஐடியாநிறுவனத்துக்கு 22கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக 45 ஆயிரம் கோடி ரூபாயாக வசூலிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிதி வசூலித்த வோடபோனின் முயற்சி குறுகிய தீர்வுக்கு முக்கியம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதிய 5ஜி சேவையால் மக்கள் வெளியேறவில்லை என்றும் தரமான நான்கு ஜி அலைக்கற்றை இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கிடைத்த பணத்தை ஆக்கபூர்வமாக அதாவது 12 ஆயிரத்து ஏழு நூற்று ஐம்பது கோடி ரூபாயை கட்டமைப்புக்காக பயன்படுத்த இருப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.