கோடக் மகிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆணை..,
பிரபல வங்கி நிறுவனமான கோடக் மகிந்திரா வங்கி, புதிதாக ஆன்லைன் மற்றும் மொபல் பேங்கிங் மூலமாகவோ வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இது மட்டுமின்றி புதிய கிரிடிட் கார்டுகளையும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. 2 ஆண்டுகள் கண்காணிப்புக்கு பிறகே நடவடிக்கை எடுப்பதாக கோடக் வங்கி தனது அறிவிப்பில் தெறிவித்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சரி செய்ய தயாராக இருப்பதாகவும், எவ்வளவு முடியுமோ அத்தனை விரைவாக சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களைத் தான் சேர்க்க முடியாது என்ற நிலையில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. 2022,2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கண்காணித்த ரிசர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியில் கோடக் மகிந்திரா வங்கியில் நிறைய குளறுபடி இருப்பதாகவும் , அதை சுட்டிக்காட்ட சரியான நேரம் இதுவே என்பதால் தடை விதித்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இதே பாணியில் எச்டிஎப்சி வங்கிக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி, 2021 ஆம் ஆண்டு குறிப்பிட்ட தடையை நீக்கி ஆணையிட்டது நினைவில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.