10%ஜம்ப் அடித்த டெஸ்லா பங்குகள்..,
உலகளவில் தனக்கென தனி ஸ்டைல் வைத்திருக்கும் டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தைகளில் 10 விழுக்காடு வரை உயர்ந்து விற்பனையாகின. கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த டெஸ்லா நிறுவனம், அண்மையில் விலை குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. இது மட்டுமின்றி புதுப்புது மின்சார கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு இந்த புதிய வகை கார்கள் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக 42 விழுக்காடு வரை சரிவை சந்தித்து வரும் டெஸ்லா நிறுவனம், ஏற்கனவே சீன நிறுவனங்களுடன் கடும் போட்டியில் உள்ளார். மலிவான விலையில் சீனாவில் மின்சார கார்கள் கிடைப்பதால் அந்நாடு மட்டுமின்றி பல நாடுகளிலும் டெஸ்லா நிறுவன கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது. இந்நிலையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெறும் வகையில் டெஸ்லா பல அறிவிப்புகளை அதிரடியாக செய்து வருகிறது. மக்களுக்கு கட்டுப்படி ஆகும் விலைகளில் டெஸ்லா கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் டெஸ்லா நிறுவன பங்குகள் திடீரென உயர முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.