இத மட்டும் செய்ய சொல்லாதீங்க பிளீஸ்..வாட்ஸ் ஆப் நிறுவனம் குமுறல்..
ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் தவிர்த்து மற்ற யார் திறந்து பார்த்தாலும் அந்த செய்தி திறக்க முடியாத கோடிங்கிற்கு பெயர் என்கிரிப்சன். இந்த நுட்பத்தை உடைத்தால் நாங்கள் வாட்ஸ் ஆப்பை நடத்த முடியாது என்று அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கு ஒன்றின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் மன்மீட் பிரீதம் சிங் அரோரா அமர்வு இந்த வழக்கு விசாரணையை செய்தது. அப்போது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தரப்பில் தேஜஸ் காரியா என்ற வழக்கறிஞர் ஆஜராகி விசாரணை வாட்ஸ் ஆப் தரப்பின் விளக்கத்தை அளித்தார். அதில் தகவலை அனுப்புபவர் மற்றும் பெறுபவருக்கு நடுவில் யார் திறந்து பார்த்தாலும் அந்த தகவல் புரியாது, திறக்கவும் முடியாது என்றும் விளக்கம் அளித்தார். இது முழுக்க முழுக்க இருவரின் தனியுரிமை சார்ந்தது என்றும் தெரிவித்தார். சர்ச்சைக்கு உரிய கருத்துகளை பதிவிடும் முதல் நபர் யார் என்பதை கண்காணிக்கக்கோரிய வழக்கில் இந்த விளக்கத்தை வாட்ஸ் ஆப் அளித்திருக்கிறது. உலகின் எந்த நாட்டிலும் வாட்ஸ்அப் தகவல்களை வேறு யாரும் பார்க்க முடியாது என்றும் வாட்ஸ்ஆப் வலுவாக விளக்கியது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், எல்லா மெசேஜையும் உடைக்கச் சொல்லவில்லை என்றும் சர்ச்சைக்கு உரிய பதிவுகளை இடுபவர்களை மட்டும் யார் முதலில் பதிவிட்டனர் என்பதை அறியவேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.