முன்னணி நிறுவனங்களை எதிர்கொள்ளும் அம்பானி மகள்..
இந்தியாவில் அதிக போட்டி நிறைந்த மின்சாதன பொருட்கள் விற்கும் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நுழைந்துள்ளது. இந்த துறை ஆண்டுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் நிலவும் இடமாகும். வைசர் என்ற நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் மகள் நிர்வகிக்கக இருக்கிறார். மின்சாதன பொருட்கள் துறையில் தற்போது வரை சாம்சங், எல்ஜி, வேர்ல்பூல், சோனி, ஹயர் ஆகிய பல நிறுவனங்கள் வலுவாக உள்ளன. குறைந்த விலையில், பொருட்களை உலகத்தரத்துக்கு தர வேண்டும் என்பதே ரிலையன்ஸ் குழுமத்தின் நோக்கம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வலுவாக உள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் பிரிவின் மூலமாக 1.5 லட்சம் மின்னணு சில்லறை விற்பனையாளர்களை இணைத்துள்ளதால் அது தங்கள் பொருட்களை விற்க எளிதாக இருக்கும் என்று அம்பானி குடும்பத்தினர் கருதியுள்ளனர். கடைகளுக்கு லாபத்தை தருவதை விட பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை தரலாம் என்பதும் அம்பானியின் நோக்கமாக இருக்கிறது. தரமான வடிவமைப்பு மற்றும் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் பொருட்களை விற்று அதில் 5ஜி சேவை இணைக்க வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாக இஷா அம்பானி தெரிவித்துள்ளார். இப்போது வரை வைசர் நிறுவனத்தில் ஏசி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. விரைவில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.