விழுந்து உடைந்த அமெரிக்க பங்குச்சந்தைகள்..
ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் 689 புள்ளிகள் குறைந்து 37,771 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. S&P 500 பங்குச்சந்தையில் 74 புள்ளிகள் சரிந்து 4,997 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. கடந்த காலாண்டில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி வெறும் 1.6 விழுக்காடாகவே இருக்கிறது. நிபுணர்கள் இந்த வளர்ச்சியை 2.4 வரை இருக்கும் என கணித்தனர். அமெரிக்காவில் 10 ஆண்டுகள் முதலீடு செய்யும் பத்திரங்கள் நல்ல லாபத்தை தந்தன. 4.70 விழுக்காடு வரை பத்திரங்கள் லாபம் தந்துள்ளன. புதிய பொருளாதார அறிக்கையில் அமெரிக்க பொருளாதாரம் இன்னும் மந்த நிலையை விட்டு விலகவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மெட்டா நிறுவன பங்குகள் 14.7 விழுக்காடு வரை விழுந்தன, ஸ்னாப் நிறுவன பங்குகள் 4.2%,ஸ்னாப் நிறுவனம் 4.9 வி ழுக்காடு விழுந்தன. அமேசான், ஆல்பபெட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்படும்போது பணவீக்கமும் அதிகரிக்கும், இதனால் அமெரிக்க பெடரல் ரிச்ர்வ், கடன்கள் மீதான தனது வட்டி விகிதத்தை இப்போது குறைக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாத அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.