பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறைப்பு கனவாகவே போயிடுமோ…
உலகின் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த படாதபாடு பட்டு வருகின்றன. 2022-ல் அமெரிக்காவில் பணவீக்கம் 5 புள்ளி என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன் விளைவாகவே அந்நாட்டில் விலைவாசி சரிபாதியாக இதுவரை சரிந்திருக்கிறது. இந்நிலையில் கடந்தாண்டு அந்நிறுவனத்தின் தலைவரான் ஜெரோம் பாவெல் அடுத்தாண்டு முதல் கடன்கள் மீதான வட்டி குறையலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும் நிலையில் இதுவரை கடன்கள் மீதான வட்டியை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைக்கவே இல்லை. இந்நிலையில் அமெரிக்க அரசின் முயற்சி வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை மாறாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி கடன்கள் மீதான வட்டி குறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் என்பது உணவு மற்றும் ஆற்றல் துறைகளை சார்ந்தே இருக்கிறது. அவை இரண்டும் முதல் காலாண்டில் 3.7 விழுக்காடாக இருக்கிறது. இது கடந்தாண்டில் 2.9 விழுக்காடாக இருந்தது. 3 முறை வட்டி குறைப்பை பெட் ரிசர்வ் குறைக்க திட்டமிட்ட நிலையில் இது இரண்டு அல்லது ஒருமுறைதான் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முயற்சிகள் கடுமையாக இருப்பதன் காரணமாக அந்நாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல் விலைவாசியும் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பிடியை இறுக்கினால் இந்தாண்டு நிச்சயம் கடுமையான ஆண்டாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.