செமிகண்டக்டர் உற்பத்திக்கு தயாராகும் இந்தியா..
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை செமி கண்டக்டர் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சிப் தயாரிக்கும் நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க அதிக நேரம் செலவிட்ட மத்திய அரசு, தற்போது செமிகண்டக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021 முதல் இதற்காக 76 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. அதுவும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் புதிய பேக்கேஜை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. இது முந்தைய திட்டத்தை விட மிகவும் பெரியது என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய அரசாங்கம் தொடங்கியதும் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது குஜராத்தில் மைக்ரானின் 22,500 கோடி ரூபாய் பேக்கேஜிங் யூனிட், குஜராத்தின் டோலேரா பகுதியில் டாடா எலெக்ட்ரானிக்கின் செமிகண்டக்டர் ஆலை 91,000 கோடி ரூபாயில் அறிமுகமாக இருக்கிறது. இதேபோல் அசாமில் மோரிகான் பகுதியில் டாடாவின் செமி கண்டக்டர் ஆலை 27 ஆயிரம் கோடி ரூபாயில் அமைய இருக்கிறது. சிஜி பவர் புராஜெக்ட் என்ற ஜப்பானிய நிறுவனமும் தாய்லாந்தின் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து 7,600கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ஆலையை தொடங்க உள்ளன. தற்போது வரை அரசு தரப்பில் புதிய ஆலைகளுக்கு 50 விழுக்காடு வரை திட்டத் தொகை நிதியாக அளிக்கப்படுகிறது. 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பேக்கேஜின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது மேலும் அதிக புராஜெக்ட்கள் அறிமுகமாக உள்ளன. ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் இந்தியாவில் 40 ஆயிரம் கோடி ரூபாயும், இஸ்ரேலைச் சேர்ந்த டவர் செமிகண்டக்டர் நிறுவனம் இந்தியாவில் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டு இருக்கிறதாம்.