ஆட்களை குறைத்தது சுந்தர்பிச்சையின் நிறுவனம்…
சென்னையில் இருந்து சென்று அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சுந்தர்பிச்சை. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தையும் அவர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே கூகுள் நிறுவனத்தில் செலவை மிச்சம் பிடிக்கும் வகையில் ஆட்குறைப்புப் பணிகள் நடைபெற்றன. அந்நிறுவனத்தில் உள்ள பைத்தான் டீமையை கொஞ்சம் கொஞ்சமாக கூகுள் நிறுவனம் அழித்துவிட்டது. அமெரிக்காவில் இந்த துறைக்கு செலவு அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குறைக்கப்பட்ட அதேநேரம் ஜெர்மனியில் இதே பாணியில் புதிய குழுவையும் அந்நிறுவனம் உருவாக்க உள்ளது. அது என்ன ஜெர்மனி திட்டம் என்று விசாரித்துப் பார்த்தால் அங்கு இந்த நுட்ப நிபுணர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்தால் போதுமாம். அமெரிக்காவில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த குழுவில் இடம்பிடித்தவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த அவர் தனது ஒட்டு மொத்த குழுவும் களைக்கப்பட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த குழுவில் 10 பேர் இருந்துள்ளனர். கூகுளின் மொத்த பைத்தான் கட்டமைப்பும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கூகுள். நிலைமை இப்படி இருக்கையில் கூகுளில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையிலும் ஆட்குறைப்பு நடைபெற்றுள்ளதாம். அமெரிக்காவில் ஆட்களை குறைத்துவிட்டு பெங்களூரு, மெக்சிகோ, டப்ளினில் புதிய ஆட்களை எடுக்கவும் திட்டம் உள்ளதாம். பல துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை போய்விட்டதாம். வன்பொருள் துறையில் உள்ள பணியாளர்களை தூக்கிவிட்டு, முதலீடு மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அதிக பணியாளர்களை களமிறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.