மெட்டா நிறுவனத்தில் சேர்ந்த டிவிட்டர் நிறுவன அதிகாரி,,
பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் பணியாற்றிய போது வீட்டுக்கு செல்லாமல் ஆபிஸ்லயே படுத்து தூங்கி பிரபலமானவர் எஸ்தர் கிராஃபீல்ட்., இவர் உட்பட ஆயிரக்கணக்கான பணியாளர்களை டிவிட்டரின் புதிய முதலாளியான எலான் மஸ்க் வேலையை விட்டு தூக்கிவிட்டார். இந்த நிலையில் எஸ்தர் கிராஃபீல்ட் தற்போது ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இணைந்துவிட்டார். மெசஞ்சர் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநராக இணைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே வேறு எந்த நிறுவனமும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை மெட்டா ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர், கிரியேட்டர்கள், வணிகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒன்றாக பேஸ்புக் மெசஞ்சர் இணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மனித குலத்தில் பாதி பேரை அதாவது 400 கோடி பேரை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் சக்தி மெட்டா நிறுவனத்துக்கு உள்ளதாகவும் எஸ்தர் தெரிவித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க்கின் பணிகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் எஸ்தர் தெரிவித்துள்ளார். தங்கள் வசம் இருக்கும் செயலிகளுக்குள்ளேயே செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும் மார்க் சக்கர்பர்க் இணைத்துள்ளதாக தெரிவித்தார்.