உடைந்தது கோத்ரேஜ் குடும்பம் …
127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரேஜ் குழுமத்தின் வணிகம் பிரித்துக் கொடுக்க இசைவு ஏற்பட்டுள்ளது. சோப்பில் இருந்து ரியஸ் எஸ்டேட் வரை அனைத்து துறைகளிலும் கோத்ரேஜ் நிறுவனம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது.
சொத்து பிரித்துக் கொடுத்துள்ள தரவுகளின்படி ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரின் சகோதரர் நாடிர் ஆகிய இருவருக்கும் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் அவரின் உறவினர்களான ஜம்ஷைத் மற்றும் ஸ்மித்தா ஆகியோருக்கு கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் மற்றும் சில வங்கிகள் மற்றும் மும்பையில் சில வணிக கட்டிடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனத்துக்கு விமானம், பாதுகாப்புத்துறை, ஃபர்னிச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியன இடம்பிடித்துள்ளன. இதனை ஜம்ஷைத் மற்றும் அவரின் சகோதரி ஸ்மித்தா நிர்வகிக்க இருக்கின்றனர். மும்பையிலேயே 3,400 ஏக்கர் அளவுக்கு நிலங்களும் உள்ளன. இதன் குறைந்தபட்ச மதிப்பே 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. Godrej Industries, Godrej Consumer Products, Godrej Properties, Godrej Agrovet, Astec Lifesciences ஆகிய நிறுவனங்களை ஆதி மற்றும் நாடிர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சொத்துகளை பிரச்சனை இன்றி பிரித்துக்கொள்ளும் நோக்கில் அதியும் நாடிரும் அண்மையில் கோத்ரேஜ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியிருந்தனர். சொத்துகள் கோத்ரேஜ் நிறுவனத்தின் வாரிசுகளுக்கு சென்றுவிட்டபோதிலும் அதன் பெயர்களில் மாற்றம் ஏற்படவில்லை. பொருளாதார சுதந்திரத்துக்காக 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கோத்ரேஜ் நிறுவனம், பல ஆண்டுகளாக தேசத்தின் பல்வேறு துறைகளில் கோத்ரேஜ் இயங்கியுள்ளதாகவும், அதே பாரம்பரியத்தை தொடக விரும்புவதாகவும் நாடிர் கோத்ரேஜ் தெரிவித்துள்ளார்.