“செத்தாலும் மதிப்பு உயரும்”
முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆணவர் வாரன் பபெட். இவரின் பெர்க்ஷைர் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. 93 வயதிலும் அசாத்திய திறமைகளை கொண்டுள்ளார். இவருக்கு பிறகு பெர்க் ஷைர் நிறுவனத்தை கிரெக் அபெல் என்பவர் நிர்வகிப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் இருந்துவிட்டால் கூட சந்தையில் தனது நிறுவன பங்குகள் உயரும் என்று பபெட் கூறியுள்ளார். ஏற்கனவே வாரணின் நிறுவனம் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தபோது, அவரின் மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழும் அச்சம் உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் ரசிகராக பதில் அளித்து உள்ளார். அதாவது தமக்கு 93வயதாகிறது என்ற பபெட். தாம் ஆரோக்கியமாக உள்ளதாகவும், தற்போதைய வாழ்வு, எக்ஸ்டா இன்னிங்ஸ் என்றும் கூறினார். வாரனுக்கு பிறகு நிறுவனம் என்ன ஆகுமோ என்று முதலீட்டாளர்கள் மத்தியல் அச்சம் உள்ள சூழலில், அதற்கு வாரன் விளக்கம் அளித்து உள்ளார். தனது நிறுவன பங்குகள் உயரும் என்று கூறிய அவர், தங்கள் நிறுவனத்தில் முதலீட்டு ஆலோசகர்கள் குழு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். வாரனின் நிறுவனத்தில் டெட், டாட் ஆகிய இரண்டு பேர் மட்டும் 10விழுக்காடு ஈக்விட்டி பங்குகளை வைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான் தனது மரணத்தை பற்றி பேசியுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது. எனினும் அவரின் ஆலோசனைகள் நிச்சயம் “மிஸ்”செய்யப்படும் என்று பெர்க்ஷைர் நிறுவன பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.