காத்ரேஜ் குடும்ப 6வருஷ டீல் தெரியுமா??
127ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது கோத்ரேஜ் நிறுவனம். வாரிசுகளுக்கு சொத்துகளை பிரித்து அளித்தது. ஆதி மற்றும் அவரின் தம்பி நாடிர் ஒரு பக்கமாகவும். ஜம்ஷைத் மற்றும் அவரின் தங்கை ஸ்மிதா மற்றொரு தரப்பாகவும் உள்ளனர். கோத்ரேஜ் நிறுவனம் பூட்டு மட்டும் இன்றி, பாதுகாப்பு அம்சங்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின் சாதனை பொருட்கள் ஆகிய வற்றை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப வணிகத்தை பிரித்த போது இரு தரப்பையும் அழைத்து பேசி ஒப்பந்தம் செய்து வைக்கப் பட்டது. அதன்படி ஒரு தரப்பின் வணிகத்தில் மற்ற ஒரு தரப்பு அடுத்த 6ஆண்டுகளுக்கு தலையிட கூடாது என்றும். ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் இந்த கட்டுப்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. குடும்ப சொத்துகளை விற்கவோ, இல்லை கை மாற்ற எந்த வித ராயல்டி தொகையோ இரு தரப்பும் வழங்க வேண்டியது இல்லை என்றும் டீல் முடிக்க பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதியில் இருந்து 6ஆண்டுகள் தடை அமலில் உள்ளது. ஜம்ஷைத் வசம் தான் ஆதிக சொத்துகளை உள்ளன. அதே நேரம் முக்கியமான சொத்துக்கள் மற்றும், நிறுவனங்கள் ஆதி வசம் உள்ளது குறிப்பிடத் தக்கது.