பெர்க்ஷைர் ஆண்டுக்கூட்டத்தில் விவாதித்தது என்ன?
உலகின் மூத்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் நிறுவனம் பெர்க்ஷைர் ஹாத்வே., அமெரிக்காவில் உள்ள ஒமாஹா சிஎச்ஐ சுகாதார மையத்தில் அந்நிறுவனத்திந் ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டது. 50 ஆயிரம் பொருட்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விற்றது போக மீதம் உள்ள வருவாய் மற்றும் லாபம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பெர்க்ஷைர் நிறுவனத்தின் பண கையிருப்பு 189 பில்லயின் அமெரிக்க டாலர் என்று அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டைவிட இந்தாண்டு வருவாய் உயர்ந்திருப்பதாக வாரன் பஃபெட் அறிவித்தார். வரும் ஆண்டுகளில் இன்னும் உயரும் என்றும் ஆருடம் கூறினார்.ஒரு நாளைக்கு 100 மில்லியன் டாலரை பெர்க்ஷைர் நிறுவனம் ஈட்டி வருவதாகவும், தினசரி பங்குச் சந்தைகளில் விலையை சரிபார்க்கும் நபரால் பணத்தை பெரிதாக சேர்க்க முடியாது என்றும் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்போம் என்று அறிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு என்பது அணு குண்டு போன்றது என்றும் கண்ணாடி குடுவையில் இருந்து வெளியேறிய பூதம் என்றும் வர்ணித்தார். கனடாவில் அதிக முதலீடு செய்வது குறித்தும் வாரன் திட்டமிட்டுள்ளாராம். இந்தியாவில் முதலீடு செய்வது பற்றியும் விவாதித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது தான் பணத்தை எடுக்க வேண்டும் என்றும் தனது 20 வயது முதல் இதனை செய்வதாகவும் வாரன் தெரிவித்தார். ஐபோன்கள்தான் அனைத்து வகைகளிலும் சிறந்த தயாரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டியை உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் வாரன் குறிப்பிட்டார்.