ஆப்பிள் பங்குகளை கழற்றி விட்ட வாரன்..
முதலீட்டில் பெரிய ஜாம்பவானான வாரன் பஃப்பெட் தனது நிறுவனமான பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பகுதியை கழற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட அந்த நிறுவனம் கடந்தாண்டு 174.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிள் பங்குகளை வைத்திருந்தது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி அந்நிறுவனம் வெறும் 135.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை பங்குகளை மட்டுமே வைத்திருந்தது.
தன் கைவசவம் வைத்திருந்த 115 மில்லியன் ஆப்பிள் நிறுவன பங்குகளை வாரனின் நிறுவனம் இறக்கவிட்டுள்ளது. எனினும் இப்போதும் ஆப்பிள் நிறுவன பங்குகள் நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதை வாரன் நம்புகிறார். இப்போதும் ஆப்பிள் நிறுவனத்தில் பெரும் பங்கை வாரனின் நிறுவனம் வைத்திருக்கிறது. எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திந் பங்குகளை வைத்திருக்க முயற்சிப்போம் என்று ஏற்கனவே வாரன் தெரிவித்திருந்தார். 189 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணம் வைத்திருக்கும் வாரனின் நிறுவனம், ஆப்பிளில் ஏன் இன்னும் அதிக முதலீடுகளை செய்திருக்கிறது என்று கேள்வி எழாமல் இல்லை. வரும் நாட்களில் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரலாம் என்பதை மறைமுகமாக அவர் தெரிவிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ல் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று பலரும் நம்பாத நிலையில் பஃபெட் நம்பினார். பெர்க்ஷைர் நிறுவன கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய செயல் அதிகாரி டிம் குக்கும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.