சரிவில் முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள்,மே 7 ஆம் தேதி சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 383 புள்ளிகள் சரிந்து 73,511 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 141 புள்ளிகள் சரிந்து 22,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததே பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தேசிய பங்குச்சந்தையில்வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் FMCG துறை பங்குகள் மட்டுமே 2 விழுக்காடு ஏற்றம் கண்டன., இதேபோல் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.77 விழுக்காடும் உயர்ந்தன. அதே நேரம் ரியல் எஸ்டேட்3.5 விழுக்காடும் உலோகத்துறை பங்குகள் 2.4 விழுக்காடும் சரிவை கண்டன. பொதுத்துறை வங்கிகள், சுகாதாரம் மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் முறையே 2.3, 2 மற்றும் 1 .8 விழுக்காடு சரிந்தன. 840 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன, அதே நேரம் 2441 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.82 நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் நிறைவுற்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன்240 ரூபாய் விலை உயர்ந்து 53ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6640ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து உயர்ந்து 88 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 88 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.