தங்கத்தை வாங்கிக்குவிக்கும் சீனா..
ரஷ்யா- உக்ரைன் போர், காசா போரின்போது தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக 2,400 அமெரிக்க டாலர்கள் என்ற விலையை எட்டியிருந்தது. இந்த நிலையில் சீனர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தைகளில் போட்ட பணம் திவாலான நிலையில் தங்கத்தை சீனர்கள் அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த தனிநபர்களைப்போலவே அந்நாட்டின் மத்திய வங்கியும் அதிகளவில் தங்கத்தை வாங்கி குவித்து வைத்துள்ளது. அமெரிக்காவில் கடன்கள் மீது அதிக வட்டி விகிதம், அமெரிக்க டாலர்களின் வலுவாகும் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. தங்கத்தின் மதிப்பு தற்போது 2,300 டாலர்கள்காக ஒரு அவுன்ஸ் குறைந்துள்ள போதிலும், தங்கத்தை அதிகம் பேர் வாங்கி வருகின்றனர். குறிப்பாக சீனர்கள் அதிகம் தங்கம் வாங்குவதால் சர்வதேச அளவில் தங்கத்துக்கு மதிப்பு கூடியுள்ளது. தங்கத்தை வாங்கும் சீனர்களின் தங்க நுகர்வு ஒரே ஆண்டில் 6 விழுக்காடு உயர்ந்திருக்கிறது என்கிறது சீன தங்க சங்கம்..சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரிதாக வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் முதலீடுகளை திருப்பி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தை சீனா வாங்கி பதுக்கி வைத்துள்ளது. அமெரிக்க டாலர்களுக்கு சாதகமான சூழலை தடுக்கும் நோக்கிலும் கையிருப்பு நிதியை அதிகரிக்கவும் சீனர்கள் அதிகம் தங்கம் வாங்கி வருகின்றனர்.
2021-ல் சீனாவின் கடன் 1.1 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்நிலையில் இந்த கடன் கடந்த மார்ச் மாதம் வரை 775 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. சீனாவின் மத்திய வங்கி, தங்கத்தை வாங்கி குவித்தாலும் அது மொத்த வெளிநாட்டு கையிருப்பில் வெறும் 4.6%வெளிநாட்டு பணம் கையிருப்பு உள்ளது. ஒப்பீட்டு அளவில் சீனாவில் இருப்பதைவிட இருமடங்கு இந்தியாவிடம் தங்கம் கைவசம் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.இந்த தங்கம் அனைத்தும் ரிசர்வ் வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகிறது.