முத்தூட்,மணப்புரம் பைனான்ஸ் பங்குகள் சரிவு..
தங்க நகைக்கடன்கள் குறித்து சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி நிதி, பல நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள நிலையில் மணப்புரம் மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை சரிவை கண்டன. வருமான வரிசட்டத்தை சரியாக பின்பற்றி பணத்தை வழங்க வேண்டும் என்றும், 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கப்பணத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் விதிகளை மீறியதாக ஐஐஎஃப்எல் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் புதிய சுற்றறிக்கை குறித்து நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியை நாடி விளக்கம் பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், ஐஐஎஃப்எல் நிறுவனம் அதிகளவில் தங்க நகைக்கடன் வழங்கியதாலும் முத்தூட் நிறுவனத்துக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மே 9 ஆம் தேதி பங்குச்சந்தையில் மணப்புரம் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1808 ரூபாயில் இருந்து 4.8 விழுக்காடு வரை சரிந்து 1581 ரூபாயாக குறைந்துள்ளது. மணப்புரம் நிறுவனத்தின் பங்குகள் 169 ரூபாயாக குறைந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் சொத்து நிர்வாகத்தில் 84 விழுக்காடு தங்க நகைகடன்களாக இருக்கிறது.
மக்கள் பலரும் தங்கள் வசம் இருக்கும் பணத்தை தங்க நகை பத்திரங்களாக வாங்கி வருவதாகவும் , ஈடிஎஃப் வகையில் முதலீடும் செய்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி போன்ற கண்காணிப்பு அமைப்புகள் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கவேண்டுமானால் தங்கப்பத்திரம் மற்றும் கோல்ட் ஈடிஎஃப் வகையில் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்