5 ஆண்டுகளில் 41 ஆயிரம் ரூபாய் வளர்ந்த தங்கம்..
உள்நாட்டு தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலர் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரிட்டன் மத்திய வங்கியும் விலைவாசியை கட்டுப்படுத்த பெரியளவில் கடன் விகிதங்களை மாற்றாமல் உள்ளதும் தங்கம் விலை உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியர்கள் அக்ஷய திருதியை கொண்டாடியதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கரன்சி சந்தை எனப்படும் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு பெரிதாக வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கம் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். சரசரியாக 2019ஆம் ஆண்டு 31,729 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலை தற்பபோது 72ஆயிரத்து 750 ரூபாயாக விற்கப்படுகிறது. மத்திய வங்கிகள் சரிவு, சர்வதேச அளவில் நிலவும் போர் சூழல் உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளின் மத்திய வங்கிகள் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்து 37 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளன. தங்கத்தை வாங்குவதை விட தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபத்தை தரும் என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. பெரிய நாடுகளில் பொதுத்தேர்தல்கள் எப்போது நடக்கிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இந்தாண்டில் மட்டும் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட 40 முக்கிய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இது மட்டுமின்றி வரும் நாட்களில் தங்கம் விலை 10 கிராம் 80 முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை கூட உயரக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.