கூகுள் Vs மைக்ரோசாஃப்ட் வார்த்தை போர்..

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சத்யா நாதெள்ளா, இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூகுள் நிறுவனத்தின் தேடுபொறியை 800 பவுண்ட் கொரில்லா என்று விமர்சித்தார். தங்கள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் எப்படி கொரில்லாவை ஆட்டம் போட வைக்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, வேறொருவரின் இசைக்கு நடனமாடுவது தவறாக முடியும் என்று தெரிவித்துள்ள சுந்தர்., தமக்கும் கூகுளுக்கும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியும் என்றும், தங்கள் சொந்த இசையை கவனித்து வருவதாகவும் , தங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் செய்கிறோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். கூகுளுக்கும், மைக்ரோசாஃப்டுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் போட்டி நிலவுவதாகவும், போட்டியில் தனித்து நிற்க புதுமை அவசியம் என்றும் சுந்தர் பிச்சை அழகாக விமர்சனங்களை கையாண்டார். அண்மையில் பிங் என்ற தேடுபொறியின் புதிய அப்டேட் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய சத்திய நாதெள்ளா, கூகுள் நிறுவனத்தின் சர்வர்களை கொரில்லா என்று விமர்சித்தார். ஏற்கனவே பலரை வேலையைவிட்டு தூக்கி வரும் சுந்தர் பிச்சை ,புதிய நுட்பங்களை களமிறக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த சூழலை பயன்படுத்தி சத்ய நாதெள்ள கூகுள் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.