ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கியது ஏன்?..
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஷ்ய கச்சா எண்ணெயை யாரேனும் ஒருவர் வாங்க வேண்டும் என்றும், இல்லையெனில் உலகளவில் கச்சா எண்ணெய் உயர்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு, ரஷ்யா-சீனா மத்தியில் உள்ள நட்பு உள்ளிட்டவை குறித்தும் கார்செட்டி பேசினார். கடந்த ஜி20 உச்சிமாநாட்டின்போது கூட உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து பணியாற்ற உள்ளதாக முடிவெடுத்ததை சுட்டிக்காட்டினார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்திருந்த போது, கடந்த 2022-ல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாதான் அதிக கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்கியது. அப்போது நீங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. ஜி7 நாடுகள் கட்டுப்பாட்டால் ரஷ்யாவுக்கு கிடைக்கும் லாபம் கட்டுப்பட்டதாகவும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு மேல் விற்கக்கூடாது என்ற அறிவிப்பு பலன்தந்தாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் சோவ்கம்ஃபிளாட் என்ற நிறுவனத்திடம் இருந்து கச்சா எண்ணெய்களை இந்தியாவுக்கு கொண்டுவர அமெரிக்கா தடை விதித்தது. இதனால் அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பாதிக்கப்பட்டது. ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு இதுவரை நல்லபடியாகவே இருக்கும் நிலையில், அமெரிக்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளது தெளிவை ஏற்படுத்தியுள்ளது.