உயர்ந்து முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், மே14 ஆம் தேதி நல்ல ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயர்ந்து 73,104 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113 புள்ளிகள் உயர்ந்து 22,217 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை பங்குகள் 2.77 விழுக்காடு உயர்ந்து முடிந்தன. இதேபோல் ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் தலா 1.8 விழுக்காடு உயர்ந்தன. சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மருந்துத்துறை பங்குகள் அரை விழுக்காடு வரை சரிவை கண்டன. கடந்த சில நாட்களாக சரிவு பாதையில் இருந்த இந்திய சந்தைகள் தற்போது உயரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியாகும் சூழலில் அதன் எதிரொலியாகவே பலும் முதலீடுகளை செய்துள்ளனர். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 520 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6690ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து உயர்ந்து 90 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 90 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.