சீமன்ஸ் பிரிவுக்கு ஒப்புதல்..
ஜெர்மனியைச் சேர்ந்த டெக் நிறுவனமான சீமன்ஸ் நிறுவனம் தனது இந்திய பிரிவில் ஆற்றல் துறையை மட்டும் தனியான நிறுவனமாக மாற்ற அந்நிறுவன இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக பிரிக்கப்படும் நிறுவனம் விரைவில் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கிறது. தற்போது ஒரு சீமன்ஸ் நிறுவன பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு சீமன்ஸ் எனர்ஜி பங்கு அளிக்கவும் அந்த நிறுவன இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இடம்பெயர்தல் துறையில் உள்ள அந்நிறுவனம் , ஆற்றல் துறையிலும் தற்சார்பு பெற்ற நிறுவனமாக மாற்ற பணிகள் நடப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. சீமன்ஸில் இருந்து அதன் ஆற்றல் பிரிவு 2025-ம் ஆண்டுக்குள் தனியாக பிரியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சீமன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் 896 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது. அந்நிறுவனம் 19 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளது. இதே நிறுவனம் கோவாவில் கேஸ் தடுப்பு சுவிட்ச் கியர் ஆலையை விரிவாக்க 519 கோடி ரூபாய் அளிக்கவும், அவுரங்காபாத்தில் மெட்ரோ ரயில் உற்பத்தியையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.