2031-ல் இரட்டிப்பு?
2031 ஆம் ஆண்டில் இந்தியாவின் நுகர்வோர் சந்தை இருமடங்காக வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிஐஐ அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18 விழுக்காடு இருக்கும் என்றார். நுகர்வோர் சந்தையின் பணப்புழக்க வாய்ப்பு 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உணவுத்துறையில் இந்தியர்கள் அதிகம் செலவு செய்வதாகவும், 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த துறையில் பணப்புழக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். உற்பத்தித்துறையில் கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். உற்பத்தி துறையை வலுப்படுத்தினால் உள்ளூர்தேவை பூர்த்தியாவது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறையும் என்றும் குறிப்பிட்டார். வரும் தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராவார் என்று நம்பிக்கை தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜூலையில் வரும் பட்ஜெட்டடில் சிஐஐ அமைப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.