மியூச்சுவல் ஃபண்டுக்கு குவியும் ஆதரவு..
பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை மாதந்தோறும் உயர்ந்து வருவதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
ரீட்டெயில் முதலீட்டாளர்கள்தான் அதிகரித்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தனிநபர்களே நேரடியாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் அளவு ஓராண்டில் 44 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு தனிநபர்கள் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்த தொகை 23 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அப்படியே கட்பண்ணி இந்தாண்டு பார்த்தால் இந்த தொகை ஏப்ரல் 2024-ல் 34 புள்ளி 52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த தகவலை மியூச்சுவல் பண்ட் இந்திய சங்கமான AMFI அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 60.5%ஆக உயர்ந்திருக்கிறது. நிறுவனங்களின் பங்கு 39.5 விழுக்காடாக உள்ளது. நிறுவனங்கள் என்று வரும்போது 39.5 விழுக்காட்டில் 95 விழுக்காடு முதலீடுகள் கார்பரேட் நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் தொகை 57.01 லட்சம் கோடி ரூபாயாக ஏப்ரல் மாதத்தில் உள்ளது. பரஸ்பர நிதி மட்டுமின்றி, ஈக்விட்டிகளிலும் தனிநபர்கள் முதலீடு கணிசமாக உயர்ந்திருக்கிறது. தனிநபர்கள் ஈக்விட்டியில் முதலீடு செய்திருக்கும் அளவு 85 விழுக்காடாக உள்ளது.