முறிகிறதா H1B விசா மீதான காதல்..?
ஒரு காலத்தில் ஐடி வேலைக்கு சேர்ந்தவர்களின் கனவாக அமெரிக்காவில் போய் பணியாற்ற வேண்டும் என்று இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா செல்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. 2015-ல் இருந்து 2023 வரையிலான புள்ளிவிரத்தின்படி, டாப் 7 ஐடி நிறுவனங்களின் பணியாளர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 56 விழுக்காடு குறைந்தும் இருக்கிறது. 2015-ல் 15,166 பேர் அமெரிக்காவுக்கு H1B விசாவில் சென்ற நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 6,732 ஆக குறைந்திருக்கிறது. டிசிஎஸில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் விகிதம் 75 விழுக்காடு குறைந்திருக்கிறது. இன்போசிஸில் 21, விப்ரோவில் 69, எச்சிஎல் அமெரிக்காவில் 46விழுக்காடும், டெக் மகிந்திராவில் 62விழுக்காடும், எக்ஸ்அவேர் நிறுவனத்தில் 56 விழுக்காடு பணியாளர்களும் அமெரிக்க விசாவுக்கு தேர்வாவது குறைந்திருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக, அமெரிக்காவில் உள்ள இந்த டெக் நிறுவனங்கள் அமெரிக்கர்களையே தேர்வு செய்ய அதிக விருப்பம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய வேண்டுமெனில் அங்கு செலவு அதிகம் என்பதும் முக்கிய காரணமாகும். இந்தியர்கள் அமெரிக்கா சென்று வேலை செய்யும் விகிதம் வரும்நாட்களிலும் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள்., எச்1பி விசாவுக்கான பதிவு கட்டணம் 2 ஆயிரம் விழுக்காடு வரை உயர்ந்திருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.