2026-ல் வருகிறது பறக்கும் கார்..
சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் ஏரே எச்டி என்ற நிறுவனம் , 2026-ல் முதல் பறக்கும் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய இருக்கிறது. கார் முழுவதுமாக பறக்காது, அதே நேரம் காரில் உள்ள டிரோனில் இரண்டு பேர் பறந்து செல்ல முடியும். இந்த கார்களுக்கான ஆர்டர் இந்தாண்டே பெறப்பட உள்ளது. ஆனாலும் 2026-ல்தான் இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட இருக்கிறது. இயற்கை அழகை சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்காகவே இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், காரின் மேல் உள்ள டிரோனில் குறுகிய உயரத்துக்கு பறந்து இயற்கை அழகை ரசிக்கும் வகையில் காரும் டிரோனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த டிரோன்களில் பறக்க தனி லைசன்ஸ் ஏதும் தேவைப்படாது என்றும் அதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். முதல் கட்டத்தில் லைசன்ஸ் இல்லாமலும் பின்னர் படிப்படியாக லைசன்ஸ் முறை அமலாகும் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார கார்களை அதிகம் உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், புதிய நுட்பத்துடன் காரை வடிவமைத்திருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. காரும் காருக்கு மேல் டிரோனும் என புதுமையான கண்டுபிடிப்புக்கு இந்த நிறுவன கார் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. எனினும் இந்த கார் என்ன விலை, எவ்வளவு வேகம் செல்லும் என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.